பி.எட். நுழைவுத் தேர்வு-
கோவையில் உள்ள பாரதியார் பல்கலையில் பி.எட். பயில விரும்பும் மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வு 2012 மார்ச் 25ம் தேதி நடைபெறுகிறது.
தொலைதூரக் கல்வி இயக்ககம் வழங்கும் பி.எட். பயில, ஏதேனும் ஒரு பள்ளியில் இரண்டு ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றியிருக்க வேண்டும் மற்றும் இளநிலை அல்லது முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
டிசம்பர் மாதம் 12ம் தேதியில் இருந்து விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பல்கலைக்கு அனுப்ப வேண்டிய கடைசி நாள் 2012, பிப்ரவரி 28ம் தேதியாகும். நுழைவுத் தேர்வு 2012 மார்ச் மாதம் 25ம் தேதி நடைபெறுகிறது.