அலுவலக மற்றும் கூட்டணி தொடர்பான செய்திகளை உடனே பெற உங்கள் மொபைலிலிருந்து START 0 ௦என்று டைப் செய்து 1909 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும். பிறகு ON koottaninews என்று டைப் செய்து 9870807070 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும்.

27.12.11


ஜனகன மன தேசிய கீதத்துக்கு 100-வது ஆண்டு தினம்
புதுடெல்லி, டிச.27-
`அடிமை இந்தியா'வில், தேசிய உணர்வை தட்டி எழுப்பிய `ஜன கன மன' பாடல், முதன் முறையாக 100 ஆண்டுகளுக்கு முன்பு, கடந்த 1911-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27-ந்தேதி அன்று ஒலித்தது. இந்தியாவின் தேசிய கீதமான இந்த பாடலுக்கு நேற்று 100-வது ஆண்டு பிறந்த தினமாகும். 21-ம் நூற்றாண்டின் ஒப்பற்ற வங்கக்கவிஞரும், நோபல் பரிசு பெற்றவருமான தாகூர் என்று அழைக்கப்படும் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய இந்த பாடல், 1911-ல் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் முதன் முறையாக பாடப்பட்டது. விடுதலை போராட்ட காலத்தில் ஒவ்வொரு இந்தியரின் தேசப்பற்றை தட்டி எழுப்பிய பாடல் இது. 1950-ம் ஆண்டு ஜனவரி 24-ந்தேதி அன்று இந்த பாடல், இந்தியாவின் தேசியகீதமாக அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. ஜனகன மன பாடலை 1911-ம் ஆண்டிலேயே வங்காள மொழியில் இருந்து ஆங்கில த்துக்கு தாகூர் மொழி பெயர்த்தார்.