அலுவலக மற்றும் கூட்டணி தொடர்பான செய்திகளை உடனே பெற உங்கள் மொபைலிலிருந்து START 0 ௦என்று டைப் செய்து 1909 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும். பிறகு ON koottaninews என்று டைப் செய்து 9870807070 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும்.

30.12.11


ஆசிரியர் கல்விச் சுற்றுலாவுக்கு ரூ.8 கோடி ஒதுக்கீடு-30-12-2011

தமிழகத்தில், அரசுப் பள்ளிகளில், இடைநிலைக் கல்வியான, 9 மற்றும் 10ம் வகுப்பு கல்வித் தரத்தை மேம்படுத்த, மத்திய அரசின் நிதியுதவியுடன், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம், செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், ஆசிரியர்களுக்கு பயிற்சி, புதிய வகுப்பறை கட்டடம், புதிய ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட, பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.சேலம்: அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ், 16 ஆயிரம் தமிழக ஆசிரியர்கள் கல்விப் பயணம் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

27.12.11


ஜனகன மன தேசிய கீதத்துக்கு 100-வது ஆண்டு தினம்
புதுடெல்லி, டிச.27-
`அடிமை இந்தியா'வில், தேசிய உணர்வை தட்டி எழுப்பிய `ஜன கன மன' பாடல், முதன் முறையாக 100 ஆண்டுகளுக்கு முன்பு, கடந்த 1911-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27-ந்தேதி அன்று ஒலித்தது. இந்தியாவின் தேசிய கீதமான இந்த பாடலுக்கு நேற்று 100-வது ஆண்டு பிறந்த தினமாகும். 21-ம் நூற்றாண்டின் ஒப்பற்ற வங்கக்கவிஞரும், நோபல் பரிசு பெற்றவருமான தாகூர் என்று அழைக்கப்படும் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய இந்த பாடல், 1911-ல் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் முதன் முறையாக பாடப்பட்டது. விடுதலை போராட்ட காலத்தில் ஒவ்வொரு இந்தியரின் தேசப்பற்றை தட்டி எழுப்பிய பாடல் இது. 1950-ம் ஆண்டு ஜனவரி 24-ந்தேதி அன்று இந்த பாடல், இந்தியாவின் தேசியகீதமாக அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. ஜனகன மன பாடலை 1911-ம் ஆண்டிலேயே வங்காள மொழியில் இருந்து ஆங்கில த்துக்கு தாகூர் மொழி பெயர்த்தார்.

26.12.11


பகுதி நேர ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு துவங்கியது-26-12-2011

பகுதி நேர ஆசிரியர்களை நியமிப்பதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு டிசம்பர் 26ம் தேதி துவங்கியது.

25.12.11


அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு இறுதி எச்சரிக்கை-25-12-2011

சென்னை: அங்கீகாரம் இல்லாத நர்சரி மற்றும் பிரைமரிப் பள்ளிகளுக்கு, நோட்டீஸ் அனுப்பப் பட்டிருப்பது, வெறும் மிரட்டல் கிடையாது; அரசு விதிமுறைகளை பூர்த்தி செய்யாவிட்டால், சம்பந்தபட்ட பள்ளிகள் இழுத்து மூடப்படும்.
இவ்வாறு ஆவேசத்துடன் கூறியிருப்பது தொடக்க கல்வித்துறை அதிகாரிகள் வட்டாரத்தினர்.

24.12.11


பட்டதாரி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு இல்லாமல் பணி நியமனம்-24-12-2011

தமிழகத்தில் கல்வித் துறையை மேம்படுத்த தமிழக அரசு அதீத அக்கறை செலுத்தி வருகிறது. அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற இலக்கோடு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் கலந்தாய்வு இல்லாமல் முதல் றையாக துறை அதிகாரிகளே பணி நியமனம் செய்கின்றனர்.
 சிறப்பாக பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு விருது: முதல்வர்


சென்னை: தமிழகத்தில் சிறப்பாக பணிபுரியும் மூன்று அரசு ஊழியர்களுக்கு நல் ஆளுமை விருது என்ற பெயரில் விருது வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அரசின் திட்டங்களை ஊழியர்கள் கையாண்ட விதம், புது முயற்சி ஆகியவற்றின் அடிப்படையில் ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். பொது மக்களுக்கான சேவைகள், வரி மேலாண்மை, நிர்வாக சீர்திருத்தங்கள் ஆகியன செயல்படுத்தப்பட்ட முறையை பாராட்டும் வகையிலும் இருக்கும். ஆண்டுதோறும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் 2 லட்ச ரூபாய் பரிசு மற்றும் பதக்கம் ஆகியவை சுதந்திர தினத்தனறு முதல்வரால் வழங்கப்படும் எனவும், இதற்காக ஆண்டுக்கு 15 லட்ச ரூபாய் நிதி ஒதுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.