அலுவலக மற்றும் கூட்டணி தொடர்பான செய்திகளை உடனே பெற உங்கள் மொபைலிலிருந்து START 0 ௦என்று டைப் செய்து 1909 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும். பிறகு ON koottaninews என்று டைப் செய்து 9870807070 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும்.

17.4.12


ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்யவேண்டும்-அகில இந்திய ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கோரிக்கை

தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருத்துறைப்பூண்டி வட்டார கிளை சார்பில் பணிநிறைவு பெறுவோருக்கு பாராட்டு விழா, தேசிய நல்லாசிரியர் விருது பெற்றோருக்கும், மாநில அறிவியல் கண்காட்சியில் தங்கம் வென்ற மாணவர்களுக்கு பாராட்டுவிழா திருத்துறைப்பூண்டியில் நேற்று நடைபெற்றது.
இதில் பங்கேற்க வந்த அகில இந்திய ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் நிருபர்களிடம் கூறியது:
. நாடுமுழுவதும் 2500 நவோதயா பள்ளிகளை மத்திய அரசு துவங்கவுள்ளது. இதில் 1250 திறக்கப்படவுள்ளது. இதில் கிராமப்புற மாணவர்கள் படிக்கமுடியாது. ஏழை மாணவர்களின் படிப்பு பாதிக்கும். ஆசிரியர் தகுதிதேர்வை ரத்துசெய்யவேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும்போது பாராளுமன்றம் முன் 2 நாள் 2 லட்சம் ஆசிரியர்களை திரட்டி மறியல் நடைபெறுகிறது. அதன்பின்னர் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் அக்டோபர் 4, 5 அஸ்ஸாம் கவுகாத்தியில் நடைபெறும் அகில இந்திய மாநாட்டில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றார்.
இதில் மாநில பொருளாளர் தமிழ்செல்வன், முன்னாள் மாநில தலைவர் பெரியசாமி, மாவட்ட செயலாளர் மதிவாணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.